Saturday, August 20, 2011

புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்த லினோவா ஆயத்தம்

நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் லேப்டாப் மாடல்களை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டை கலக்கிய, லினோவா தற்போது அதே அளவுக்கு டேப்லெட் தயாரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அடுத்தடுத்து டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தி வரும் அந்த நிறுவனம் தற்போது வீடியோ கான்பரன்சிங் வசதியுடன் கூடிய புதிய டேப்லெட்டை விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

லீபேடு ஏ-1-07 என்ற பெயரில் வரும் இந்த புதிய டேப்லெட் 7இஞ்ச் தொடுதிரை கொண்டதாக இருக்கிறது. இதில், ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சப்ரீடு ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேகத்தை 1ஜிகாஹெர்ட்ஸ் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் பிராசஸர் கூட்டுகிறது. 512 ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் சேமிப்பு திறன் ஆகியவை இதற்கு வலுவூட்டுகிறது.

தவிர, வீடியோ கான்பரன்சிங் வசதிக்காக முகப்பு கேமராவுடன் வந்துள்ளது. தரமான புகைப்படங்களை எடுக்க 3.0 மெகாபிக்செல் கேமராவும் உண்டு. யுஎஸ்பி போர்ட், சேமிப்பு திறனை அதிகரித்துக்கொள்ள மைக்ரோ எஸ்டி மெமரி ஸ்லாட்டும் இருக்கிறது.

மேலும், இந்த டேப்லெட் 3ஜி நெட்வோர்க்கை சப்போர்ட் செய்யும் விதத்தில் வர இருப்பதாகவும் யூக தகவல்கள் பரவி கிடக்கின்றன. இதில், ஆற்றல்வாய்ந்த 3,550 எம்ஏஎச் ஐகானிக் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது பயன்பாட்டை பொறுத்து 7 மணிநேரம் பேக்கப்பை தரவல்லது.

400 கிராம் எடையுடன், 195x 125x 11.95 மிமீ அளவுகளில் கையாள்வதற்கு மிக ஏதுவாக வடிவமைப்பை பெற்றுள்ளது. சீனாவில் மட்டும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள லீபேடு ஏ-1-07 டேப்லேட் விரைவில் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Read in english

Lenovo is hitting hard and fast in the competition of the tablet markets. After its recent release of Ideapad K1 Android tablet in US, Lenovo just brought to light what has been a mystery at the FCC a few months before –Lenovo LePad A1-07. Lenovo LePad A1-07 has a 7 inch stylish touchscreen display capable of a top resolution of 1024 x 600 pixels. The operating system in the LePad A1-07 is the 2.3 Gingerbread version of the highly successful Android. Lenovo LePad A1-07 exhibits great performance thanks to the 1 GHz Texas instruments OMAP 3622 processors. It has an internal memory of 512 MB RAM and a storage space of 16 GB. LePad A1-07 is designed with dual cameras integrated to it.

No comments:

Post a Comment