ரத்த தானம் செய்வதற்காகவே புதிய இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளனர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள்.
தமிழகமெங்கும் ரத்ததானம் செய்ய விரும்பும் ரசிகர்களை ஒருங்கிணைத்து இந்த இணையதளத்தை துவக்கியுள்ளனர்.
www.rajiniblood.com என்ற இந்த இணைய தளத்தை நெல்லையை சேர்ந்த ரஜினி ரசிகர் தாயப்பன், சிவகாசி ரசிகர்கள் பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் துவங்கியுள்ளனர்.
அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவோர் தங்களுக்கு தேவைப்படும் ரத்தத்தின் வகை மற்றும் எந்த மாவட்டத்தில் தேவை என்ற விவரத்தை அதில் தெரிவித்தால் உடனடியாக ரத்ததானம் செய்பவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏராளமான ரசிகர்கள் ரத்ததானம் செய்ய பெயர்களை இதில் பதிவு செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் மூலம் தேவையான ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இது முழுக்க முழுக்க இலவச சேவை.
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நேற்று முதல் இந்த இணையதளம் செயல்படத் துவங்கியுள்ளது. இந்த தளத்திலேயே யார் ரத்ததானம் செய்யலாம், அதனால் ஏதாவது பாதிப்பு உண்டா போன்ற முக்கிய குறிப்புகளையும் தந்துள்ளனர்.
இதுகுறித்து நெல்லை ரசிகர் தாயப்பன் கூறியதாவது:
இப்படி ஒரு அமைப்பை கடந்த டிசம்பர் 12ம் தேதியே துவங்கிவிட்டோம். இது முழுக்க முழுக்க இலவச சேவையே. ரத்ததானம் செய்யும் ஆர்வமுள்ள சக ரசிகர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சி இது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment